×

கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி பாலமுரளி கோயிலில் 9 யானைகளின் அலங்கார ஊர்வலம் உற்சவர் யானை மீது பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி

பாலக்காடு, செப்.7: பாலக்காடு மாவட்டம் குன்னத்தூர்மேடு பாலமுரளி கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி 9 யானைகள் அலங்காரத்துடன், உற்சவர் யானை மீது பவனி நடந்தது. பாலக்காடு மாவட்டம் குன்னத்தூர்மேடு பாலமுரளி கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கோயிலில் நடை திறந்து சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, 9 யானைகளின் அலங்காரத்துடன் பஞ்சவாத்யங்கள் முழங்க உற்சவர் யானை மீது பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து யானை மீது உற்சவர் ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்டு, கல்மண்டபம் வழியாக வீதி உலா வந்தார். பிற்பகல் 3 மணிக்கு கோயில் வளாகத்தில் யானைகளுக்கு யானை ஊட்டு நடைபெற்றன. இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் யானைகளுக்கு சாப்பாடு உருளைகளை வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

The post கிருஷ்ணர் ஜெயந்தியையொட்டி பாலமுரளி கோயிலில் 9 யானைகளின் அலங்கார ஊர்வலம் உற்சவர் யானை மீது பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி appeared first on Dinakaran.

Tags : Balamurali temple ,Krishna Jayanti ,Bhavani ,Utsawar ,Palakkad ,Palakkad district ,Gunnathurmedu ,Utsavar ,Krishna Jayanthi ,
× RELATED ரத்னம் விமர்சனம்